ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை/கட்டுநாயக்க செய்தியாளர் ) கொழும்பு பல்கலைக் கழக சுதேச மருத்துவ பீடத்தின் யூனானி மருத்துவத்துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட “யூனானி இலவச மருத்துவ முகாம்”, தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் அனுசரணையில், பேரவை மண்டபத்தில் (15) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதில் மூட்டு வாதம், முதுகு வலி, பீனிசம், தோல் நோய்கள் உட்பட பல நாட்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டதுடன், நோயாளர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. இது தவிர, நோயாளர்களுக்குத் தேவையான ஹிஜாமா, மஸாஜ் போன்ற விசேட சிகிச்சை முறைகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. அமீத் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இம்மருத்துவ முகாமில், சுமார் இருநூறு பேர் அளவில் கலந்து கொண்டிருந்தனர். பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நசாரி காமில் உள்ளிட்ட மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
October 16, 2023
0 Comment
271 Views