சேவைகளை விரிவுபடுத்தும் ஸ்ரீPலங்கன் ஏர்லைன்ஸ்
2023 நவம்பர் 14, கொழும்பு – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தில் (டீஐயு) விமானப்பயண அனுமதிக்கான சுய சேவை (ளநடக-ளநசஎiஉந உhநஉம-in)
மற்றும் பயணப்பொதி சமர்ப்பிப்பதற்கான சுய சேவை (ளநடக-டியப-னசழி ளநசஎiஉநள) வசதிகளை
அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் தங்கள் பயணிகள் சேவைகளை மேம்படுத்துகிறது. இந்த
முன்னெடுப்பானது பயண அனுபவத்தை மீள்வரையறை செய்யவும் விமான நிலைய
நடவடிக்கைகளை சௌகரியமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க சிறப்பாக
வழிவகுக்கிறது.
நெரிசலான சந்தர்ப்பங்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு
அறிமுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சுய-சேவை கியோஸ்க்கள் (மழைளமள), பயணிகள் செக்-
இன் செயன்;முறையின் மூலம் தடையின்றி செல்லவும், விரைவாக குடியகல்வு
செயற்பாடுகளுக்குச் செல்லவும் அனுமதிக்கிறது. அடிக்கடி பயணிப்பவர்கள், குறிப்பாக,
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புறப்படும் முனையத்தில் அமைந்துள்ள
செல்ஃப் பேக் டிரொப் மூலம் பயனர் நட்பு சுய-சேவை கியோஸ்க்களால் வசதியளிக்கப்பட்ட
இந்த செக்-இன் நடைமுறையை நிச்சயம் பாராட்டுவார்கள்.
பயணிகள் இப்போது விமான செக்-இன், இருக்கை தெரிவு மற்றும் போர்டிங் பாஸ்கள்
மற்றும் பொதிகளுக்கான டெக்களை அச்சிடுதல் உள்ளிட்ட முழு செக்-இன்
செயன்முறையையும் சுயமாக மேற்கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து, அவர்கள்
தங்களுடைய பொதிகளை சிரமமின்றி செல்ஃப்-பேக்-டிராப் வசதியில் வைக்கலாம், இதன்
மூலம் குடியகல்வு அனுமதிக்குப் பின்னர் போர்டிங் கேட்களுக்கு நேரடியாகச் செல்லலாம்.
இந்த புதிய நடைமுறையின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த விமான நிலைய
மற்றும் தரைக் கையாளுகை சிரேஷ்ட முகாமையாளர் தீபால் பல்லேகங்கொட,
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து செயற்படும் அனைத்து விமான
நிறுவனங்களுக்குமான உத்தியோகபூர்வ தரை கையாளுபவர் என்ற வகையில், ஸ்ரீலங்கன்
ஏர்லைன்ஸ் மாதாந்தம் 550,000 பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும்
கையாளுகிறது. இந்த சுய-சேவை வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதானது விமான
நிலைய வசதிக்காக ஒரு புதிய தரநிலையை அமைப்பது மட்டுமல்லாமல், அதிகரித்து
வரும் பயணிகளின் எண்ணிக்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செக்-இன்
செயன்முறையை மிகவும் வினைத்திறனாக முகாமைத்துவம் செய்யவும் உதவுகிறது எனக்
குறிப்பிட்டார்.
இந்த முயற்சியானது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் ஐயுவுயு துரித
பயண முன்னெடுப்புக்கு உதவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பரந்த டிஜிட்டல் மயமாக்கல்
மூலோபாயத்துடன் இணைந்துள்ளது. இந்த நடைமுறைப்படுத்தலின் மூலம், ஸ்ரீலங்கன்
ஏர்லைன்ஸ், சர்வதேச பயணத்திற்கான சுய சேவை தொழில்நுட்பங்களை
ஏற்றுக்கொள்வதில் ஒரு பிராந்திய முன்னோடி என்ற நிலையை பெருமையுடன்
ஏற்றுக்கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தகவல் தொழில்நுட்பப்
பிரிவின் குழுத் தலைவர் சாமர பெரேரா, “எமது விமான சேவை மையத்தினை சிறந்த
தரமான சுய சேவை தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,
பயணிகளின் முன் விமான அனுபவத்தை மற்றுமொரு கட்டத்திற்கு உயர்த்துகிறோம். இந்த
முன்முயற்சியானது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும்
பயணிகளை செக்-இன் கருமபீடங்களில் உள்ள வரிசைகளில் எந்தவகையிலும் காத்திருக்க
வைத்திருக்காதது மட்டுமல்லாமல், நாட்டின் விமான நிலையங்களை டிஜிட்டல் முறையில்
மாற்றுவதற்கான இலங்கையின் பாதை வரைபடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க
முன்னேற்றத்தையும் குறிக்கிறது. நாட்டின் தேசிய விமான சேவை என்ற வகையில் இந்தத்
திட்டத்தை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இது தொடர்பற்ற பயணத்தை
நோக்கிய எமது பயணத்தில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பயோமெட்ரிக் முக அங்கீகாரம், ஈ- போர்டிங் கேட்ஸ், வேர்ச்சுவல்
மற்றும் ஒக்மென்டட் ரியாலிட்டி போன்றவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாத டிஜிட்டல்
மேம்பாடுகளை உள்ளடக்கிய ஒரு ஸ்மார்ட் சேனலை நடுமுறைப்படுத்துவது உட்பட, தனது
பயணிகளுக்கு தடையற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமான பயண
அனுபவத்தை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளது. மேலதிக தகவல்களுக்கு
றறற.ளசடையமெயn.உழஅ ஐப் பார்வையிடவும்.

