கொழும்பு
2024 ஜனவரி மாதம் தொடக்கம் VAT வரி விகிதம் 18% வரை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுகள் தொடர்பான தயாரிப்புகளைத் தவிர மற்ற அனைத்து பொருள் மற்றும் சேவைகளுக்கான VAT வரிவிலக்குகளும் நீக்கப்படும்.
பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க 55 பில்லியன் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இடம்பெற்று வரும் வரி ஏய்ப்புக்கள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்க வருமானம் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் அதிக வரிச் சலுகைகளை வழங்குவதற்கு இடமுள்ளதாக ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.