பிர்தௌசியா அஷ்ரப்
கொ/ஸாஹிராக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த்தினவிழா கல்லூரியின் அப்துல்கபூர் மண்டபத்தில் அதிபர் ரிஸ்விமரைக்கார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ்,கௌரவ அதிதியாக ,கொழும்பு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் மும்தாஸ் பேகம்,விசேட அதிதியாக தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பக நிறுவுனர் முஸ்தபா ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் ,9ம் வகுப்புமாணவர்கள் நால்வரின் நூல் வெளியீடும்,போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.கல்லூரியின் ஆசிரியர் நபீல் அபாபீல் அவர்களும் மாணவர்களுக்கான பத்து நூல்களை வெளியிட்டார்.