அஷ்ரப் ஏ சமட்
கொழும்பு ,றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் 63 வது ஆண்டு விழா கல்லூரியின் நவரங்கஹல மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (5) மாலை வெகு விமரிசையாக நடைபெற்றபோது, அதன் முன்னாள் தலைவர்களில் ஒருவரான (1979) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். பேராசிரியர் சி. மௌனகுரு கௌரவிக்கப்படும் கலைஞராகப் பங்குபற்றினார். பல்வேறு தரமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.



