நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மஹியங்கனை பிரதான வீதியின் ரம்புக்வெல்ல பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்தார். குறித்த பழக்கடை மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து அதில் பெண்ணொருவர் சிக்குண்டுள்ளதாக தெல்தெனிய பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர், சிகிச்சைகளுக்காக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். உயிரிழந்தவர் ரம்புக்வெல்ல – தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்பதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

November 5, 2023
0 Comment
33 Views