பாராளுமன்றத்தை அவமதித்து செயற்பட்டதாக கூறி சமகி ஜன பலவேகய MP பாராளுமன்றத்திலருந்து இடை நிறுத்தப்பட்டார்.
கொழும்பு:
பாராளுமன்ற செங்கோலை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதால் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவை பாராளுமன்றத்திலிருந்து 4 வாரங்கள் இடைநிறுத்தியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அவர்தன அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவரின் உரையை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பபட்டு 10 நிமிடங்களுக்கு சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 10 நிமிடங்களின் பின்னர் அமர்வு மீண்டும் ஆரமப்பிக்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற செங்கோலை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்த சபாநாயர் அவரை 4 வாரங்களுக்கு சபை அமர்வுகளிலிருந்து இடைநிறுத்துவதாக அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் வலியுறுத்திய போதிலும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பதிலளிக்க மறுத்ததையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.