உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது அதிகரித்து வருகின்றது.
இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று எழுச்சி நிலை நிலவுகிறது.
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 630,746 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரம்
இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 178,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 163,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 155,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கச் சந்தை எழுச்சி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் – பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போரினால் முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.
இதனால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.IBC Tamil

October 19, 2023
0 Comment
41 Views