ஏ.எஸ்.எம்.ஜாவித்
2023 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது.
சில இடங்களில் பெய்த பலத்த மழையிலும் மாணவர்கள் வருகை தந்நு பரீட்சை நிலையங்களில் உற்சாகத்துடன் பரீட்சை எழுதினர். தலை நகர் கொழும்பிலும் பலத்த மழையிலும் பல பாடசாலைகளில் பரீட்சைகள் தடையின்றி இடம் பெற்றதை அவதானிக்க முடிந்தது.
கொழும்பு 12 வாழைத் தோட்டம் அல்-ஹிக்கமா கல்லூரியிலும் சுமார் 94 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். அவர்கள் பரீட்சைக்கு வருகை தந்த போதும் பரீட்சை எழுதி முடிந்த பின்னருமான காட்சிகள்.


