கொழும்பு
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று ஒக்டோபர் 11 ஆம் திகதி 03 மணிக்கு வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதே வேளை அலி ஸாஹிர் மௌலானா Colombo times க்கு கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண மக்களுக்கு இன மத பேதமின்றி சேவையைற்ற எண்ணியுள்ளதாக தெரிவித்தார் .
இவர் 05 ஆவது முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.