மன்னார்
ஐஸ் போதைப்பொருள் கடத்தி போலீஸை கடித்து போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிய மன்னார் முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி பாம்பனில் கைது:
கடந்த (30) ஆம் திகதி சனிக்கிழமை இரவு மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில்
சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் விசாரணை செய்ய முற்பட்டவேளை பொலிசாரின் கையை கடித்து விட்டு தலைமறைவாகி தமிழ்நாட்டுக்குச் சென்ற நிலையில் அம்புலன்ஸ் சாரதியை மண்டபம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சந்தேக நபர் இலங்கை மன்னார் மாட்டத்தின் கடற்கரைப் பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற வேளை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய படகில் வந்து இறங்கிய குறித்த இலங்கை அம்புலனஸ் சாரதியை மண்டபம் மரைன் பொலிசார் கைது செய்துள்ளனர்
குறித்த சந்தேக நபர் மன்னார் அரச மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சாரதி என்றும் இவர் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த போது முருங்கன் பொலிசாரால் கைது செயய்ய முற்பட்ட வேளை பொலிசாரை கடித்து விட்டு தப்பி ஓடியவர் என்பதை அறிந்து கொண்ட மண்டபம் மரைன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தது