இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
தமிழ் சிங்களம் மோதலை உருவாக்கி உலகின் கவணத்தை ஏற்படுத்துவதே தமிழ் குழுக்களின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
நீர்கொழும்பு நீதிமன்றில் நடக்கும் தனக்கு எதிரான வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
காலவதியான கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு செல்லுபடியான வீசாவுடன் செல்லுபடியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முடியுமென குடிவரவு குடியகழ்வு அதிகாரி நீதிமன்றில்
சாட்சியளிக்கும்போது
ஏற்றுக்கொண்டார் என கூறிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நலல்லாட்சி அரசில், தான் போலி கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்டதாக பொய்யான முறைப்பாட்டை செய்து இரகசிய பொலிஸார் தன்னை கைதுசெய்தது சட்டபூர்வமானதா இல்லையா என நீதிமன்றத்திற்கு இன்று தெளிவாகி இருக்கும் எனக் கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் மீண்டும் இந்நாட்டில் தமிழ் சிங்களம், இந்து பெளத்த மோதலை ஏற்படுதி அரசியல் இலாபம் அடையவும் சிங்கள பெளத்தர்கள் எம்மை தாக்குகிறார்கள் என உலகின் அவதானத்தை ஏற்படுத்தவும் தமிழ் அரசியல் குழுக்களுக்கு தேவையுள்ளன. அதற்காக சிங்கள மக்களை தூண்டுவதற்காக குருந்துவிகாரை மற்றும் யாழ்ப்பாண விகாரைகளில் பிரச்சிணைகளை ஏற்படுத்துவதாக கூறினார்.
இதனை தடுப்பதற்காக அரசு தலையிட்டு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் சில அரச வர்தகங்களை சூசகமான முறையில் வீழ்த்துவதாகவும் கூறினார்.
ஜனாதிபதியின் DW தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பாக வினவியபோது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்துள்ளதனால் சிங்களம் மக்களின் அபிமாணத்தை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு நடந்துள்ளதாக தெரிவித்தார்.