


ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஹிஜ்ரி 1445 ரபிஉல் அவ்வல் நபி பிறந்த மாதத்தை முன்னிட்டு மீலாதுன் நபி நிகழ்வு நேற்று புதன் மாலை (27) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பள்ளிவாசலின் தலைவர் எம்.தாஹிர் ரஸீன் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது அல் குர்ஆன் பாராயனம், விசேட துஆ பிரார்த்தனை இடம் பெற்றதுடன் மௌலவி. எம்.எஸ். அஹமட் சூபி (மஹ்லரி) அவர்களால் நபியவர்கள் தொடர்பான விசேட பயான் ஒன்றும் இடம் பெற்றது.
இதன்போது பள்ளிவாசலின் நம்பிகையாளர்கள், பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் தௌபீக் சுபைர், உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.