கொச்சி: மும்பை தொழிலதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்த பிறகு பிரியாமணிக்கு கிட்டத்தட்ட ஹீரோயினாக நடிக்கக்கூடிய வாய்ப்புகள் பறிபோனது. எனவே, ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 5வது படமாக உருவாகும் ‘நேரு’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்றார். ஜீத்து ஜோசப் இதற்கு முன்பு இயக்கிய திரில்லர் படங்களைப் போல் இல்லாமல், இப்படம் நீதிமன்றத்தில் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையுடன் உருவாகிறது. கடந்த 2011ல் திரைக்கு வந்த ‘கிராண்ட் மாஸ்டர்’ என்ற படத்தில் மோகன்லால் மனைவியாக நடித்திருந்த பிரியாமணி, 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து ‘நேரு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தமுறை அவர் ஜோடியாக நடிக்கவில்லை. தினகரன்