

அஷ்ரப்
கொழும்பு
இராணுவத்திடமிருந்த மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி பெட்டிக்களோ கெம்பஸ்) இன்று (20) புதன்கிழமை விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஸ்தாபகர் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் சட்ட ரீதியாக கையளிக்கப்பட்டது.
கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று இடம் பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலையடுத்து பெட்டிகளோ கெம்பஸ் இராணுவத்தினர் பொறுப்பேற்று இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஸ்தாபகர் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்தப் பல்கலைக்கழக கல்லூரி உத்தியோக பூர்வமாக கையளித்த இராணுவத்தினர் பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து வெளியேறினர். (Via Noordeen Msm)