ருஸைக் பாரூக்
கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த குழுவிற்கு இடையிலான விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி சங்கத்தின் தலைவர் மொஹமட் ஷிராஸ் வழிகாட்டுதலின் கீழ் கல்லூரி மைதானத்தில் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், ரக்பி, நீச்சல், டேபிள் டென்னிஸ், ரைபிள் ஷூட்டிங், ஹாக்கி, உங்களுக்குத் தெரியுமா வினா விடை போட்டி , கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வெறு விளையாட்டுகள் நடைபெற்றன. .
சங்கத்தின் முன்னாள் தலைவர் நுஹுமான் ஹுசைன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். கிராண்ட் மாஸ்டர்ஸ் பிரிவுகளின் கீழ் 25 க்கும் மேற்பட்ட இணைந்த குழுக்கள் ஒன்றிணைந்த உணர்வில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் தடகள திறமையை வெளிப்படுத்தினர்.
கல்லூரியின் 80வது குழு பழைய மாணவர்கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட் சாம்பியன் ஆனது. மற்றும் டேபிள் டென்னிஸ் , பேட்மிண்டன் மற்றும் உங்களுக்கு தெரியுமா போட்டியில் ரன்னர் அப் ஆனது.
80வது குழு முன்னாள் தலைவர் அஸ்லம் தௌபீக் பேராசிரியர் எம்.டி.ஏ. புர்கான் வெற்றி கிண்ணத்தை கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார்இடம் இருந்து பெற்றார் கொண்டார்.
கல்லூரி ஆளுநர் சபை செயலாளர் அலவி முக்தார், பழைய மாணவர் சங்க செயலாளர் நுஸ்ரி முன்சூர், 80 வது குழு தலைவர் ஏ. எல். அன்வர், செயலாளர் அயூப் காதர், முன்னாள் தலைவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.