ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 23 வது வருட நினைவு தின தேசிய நிகழ்வு சனிக்கிழமை செப்டம்பர் (16) சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்
மு.கா தவிசாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.மஜிட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தெளபீக், முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், செய்யது அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சிப்பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.
Allah’s decided do it debut no one says don’t….but threcpeople just negative for political reasons 🙄 the man who deserves..