பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இணையவழி திட்டம்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையவழி முறையில் பணம் செலுத்தும் முறையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பல நிறுவனங்களை மையப்படுத்தி அதற்கான முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.