கொழும்பில் -_இலங்கையில் செப்டம்பர் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 900 டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்கள் சதவீதம் குறைந்திருப்பினும் மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்