கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுமய எனப்படும் காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன் கொண்டு செல்லப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான முழுமைப்படுத்தப்பட்ட 249 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இதன்போது அரசியல் தலையீடு இருக்காது எனவும், அதிகாரிகளினால் குறித்த வீடுகள் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.