5 வருடகால கருத்திட்டக் காலப்பகுதியுடனான 100,000 கிலேமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் 2020ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2023ஆம் ஆண்டு தொடக்கம் தேவையான நிதியொதுக்கீடுகள் கிடைக்காமையால், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது 28.37 பிலலியன் ரூபா செலுத்தப்பட வேண்டிய செலவுறுதிச் சிட்டைகள் காணப்படுகின்றன. அத்துடன் அத்தியாவசியமான வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2024ஆம் ஆண்டில் 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் 1000 கிலோமீற்றர் புனரமைப்புச் செய்வதற்கும அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு வேலைத்திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டியுள்ள செலவுறுதிச் சிட்டைகள் ஈடு செய்வதற்காக 2024 ஆண்டில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை பயன்படுத்தப்படாத நிதியொதிக்கீட்டை முகாமைத்துவம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.