சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் விளம்பரம் செய்வதாக கூறி, வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுக்கொண்டு, குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்து, 7 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 05.11.2024 தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.