அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு ஒவ்வொரு மாகாணமாக தற்போது ஆரம்பமாகி இலங்கை நேரப்படி நாளை காலை வரை வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
தேர்தலுக்காக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெள்ளை மாளிகை உட்பட அரசு கட்டடங்களின் முகப்புகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் நேரங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமலிருக்க ஏராளமான பொலிஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
அந்த வகையில், வாஷிங்டன் டி.சி. மாவட்டத்தில், பொது இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் 12 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அமெரிக்காவில் நேற்றும் இன்றும் பெரும்பாலான மதுபானக் சாலைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது