உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையும் வழங்குகிறது.
இந்த தரவரிசையின்படி இலங்கை 2022 ஆம் ஆண்டு 102ஆவது இடத்தையும் 2023ஆம் ஆண்டு 100ஆவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சிங்கப்பூர் 195 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது சிங்கப்பூரின் இராஜதந்திர உறவுகளின் வலிமையையும் அதன் குடிமக்களுக்கு பயண சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் ஆஸ்தீரியா, டென்மார்க், பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் தட்டிச்சென்றுள்ளனர்.
இரண்டாவது இடத்தைப் பிடித்த நாடுகள் 192 நாடுகளுக்கு இலவச விசாவையும் மூன்றாவது இடத்தைப் பிடித்த நாடுகள் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
மேலும் இந்த தரவரிசையில் இந்தியா 83ஆவது இடத்தில் உள்ளதுடன், 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையம் வழங்குகிறது.