முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 4 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பெண் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக 50,000 ரூபாவினை கையூட்டலாகப் பெற்றுக் கொண்ட குற்றத்துக்காகப் பிரதிவாதிக்கு இந்த தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதியான முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.
எவ்வாறாயினும் குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் தண்டனையை உறுதிசெய்தது.