கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு 05.11.2024 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 05.11.2024 மாலை 6.00 மணி முதல் 06.11.2024 காலை 6.00 மணி வரை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகரசபை பகுதிகள், கட்டான மற்றும் மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒரு பகுதிக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.