காசா முனையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதேபோல், மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.