தற்போது தயாரிக்கப்படும் ப்ளாஸ்டிக் பொருட்களில் பெரும்பாலானவை தரமற்றவை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்காலங்களில் தரமற்ற ப்ளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் பாவிக்கும் ப்ளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் நூற்றுக்கு 75 சதவீதமானவை பாவனைக்கு உகந்ததல்ல.
அவற்றில் உபயோகிக்கப்படும் இரசாயன திரவியங்கள் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை
பிள்ளைகளுக்கு உணவுகளைக் கொண்டு செல்வதற்கு வழங்கப்படும் உணவுப்பெட்டிகள் மற்றும் போத்தல்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.