நாட்டில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க பல சர்வதேச பயண பதிவர்கள்(International travel bloggers) மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களை இலங்கை அழைத்துள்ளது.
2024 அக்டோபர் 28 முதல் நவம்பர் 8 வரை இவர்கள் இலங்கையில் தமது சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இந்தியா, பெல்ஜியம், நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட பத்து நாடுகளைச் சேர்ந்த 30 புகழ்பெற்ற சர்வதேச பயண பதிவர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
இவர்கள், இலங்கையில் 1,000 க்கும் மேற்பட்ட வலைப்பதிவு கதைகள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உருவாக்கி வருகின்றனர்.
அத்துடன் , இலங்கையின் அனுபவங்களையும் சிறப்பம்சங்களையும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டோக், மற்றும் லிங்க்ட்இன் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த செல்வாக்குமிக்கவர்கள், யாழ்ப்பாணம் பதுளை, நீர்கொழும்பு, உட்பட்ட பல பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றனர்