இலங்கையில் நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தினை ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா (Muthith Perera) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாவிட்டால் அரிசி வியாபாரிகளுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.