பேருவளை, சீனன்கோட்டையின் முன்னணி விளையாட்டுக்கழகமான ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50ஆவது வருட பூர்த்தி விழா (பொன் விழா) நிகழ்வுகள் இம்மாதம் 10ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளன.
இதற்காக வேண்டி , நிகழ்வுகள் இடம்பெறவுள்ள சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் பல இலட்சம் ரூபா செலவில் இடம்பெற்று வருவதை படத்தில் காணலாம். இந்நிகழ்வில் வெளிநாட்டு முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு : அஜ்வாத் பாஸி