டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், Dialog Axiata இன் தாய் நிறுவனமான Axiata Group Berhad அறிக்கை ஒன்றை வௌியிட்டு, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி axiata நிறுவனத்தில் இருந்து விலகப் போவதாக அவர் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாநிதி ஹான்ஸின் முடிவை axiataவின் இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் axiataவிலும் அதன் முன்னோடியான டெலிகாம் மலேசியாவிலும் சுமார் 30 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.
டயலொக் நிறுவனத்தில், குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக, கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய 1997 முதல் 2016 வரையான காலப்பகுதியில் ஒரு சிறந்த சேவைக் காலத்தைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.