(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் புதல்வர் – முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பிணர், மேல் மாகாண சபை உறுப்பினராக பலமுறை வெற்றி பெற்று தனது சேவையை மூவிடங்களுக்கும் எனது தந்தை போன்று நானும் கொழும்பு மாவட்டத்தில் செய்துள்ளேன்.
துபாய் நாட்டின் உதவி தொண்டர் நிறுவனம் சயிடா என்ற நிறுவனத்தின் இலங்கை இணைப்பளராக இருந்து இந்த நாட்டின் கல்வித்துறையின் மறுமலர்ச்சிக்கும் கொழும்பு மாவட்த்தில் உள்ள பாடசாலைகளுக்கு எனது உதவியை இன வேறுபாடின்றி தொடர்ந்து செய்து வருகின்றேன்.
கல்விக்கு உதவி செய்பவர் என்றும் மரணிப்பதில்லை.
கற்பவனாக இரு, கற்றுக்கொடுப்பவனாக இரு அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு ஆனால் நான்காவது ஆளாக இராதே என எமது நபி மொழிக்கேற்ப இத்துறைக்கு எமது எதிர்கால சந்ததிக்காக எனது பங்களிப்பை இன்றும் நாளையும் தொடர்ந்து செய்வேன்.
இதனை எனது தேர்தலுக்காக வாக்குகளுக்கு எதிர்பார்த்துச் செய்யவில்லை.
பாடசாலைகளில் கட்டிடங்கள், மலசலகூடங்கள் குடிநீர் சுற்று மதில் அமைத்து கொடுத்துள்ளேன்.
கொழும்பு மாவட்டத்தில் மூவின மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளை இனங்கண்டு அப்பாடசாலையில் எமது துபாய் சயீடா நிறுவன உதவியுடன் வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அதனை திறந்து வைத்துள்ளோம்.
தெமட்டகொடை கைரியா கல்லூரியின் ஆரம்பப் பாடசாலைக்கு கடந்த நோன்பில் 1200 மில்லியன் ரூபா செலவில் சகல அரசியல் வாதிகளை அழைத்து தனது தந்தை பௌசி உட்பட அடிக்கல் நாட்டினார்
தற்பொழுது 2 மாடிகள் முடிவடைந்துள்ளன. அதிபர் பிறந்த தினத்தில் அதை திறந்து மாணவர்களிடம் ஒப்படைக்க முடியும்.
புதிய அரசு அரசியல் வாதிகள் பாடசாலைக்குள் நிகழ்வுக்கு அழைக்கக் கூடாது என தடை விதித்துள்ளது.
அதிபரைக் கொண்டு அதை திறந்து மாணவர்கள் வகுப்பறையில் கற்பதற்கு அனுமதி அளியுங்கள்.
கொழும்பு கலைமகள் பாடசாலை 3 மாடிகள் 400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மனோ கணேசன் எனது தந்தையும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திறந்து வைத்தோம்.
இப்பணங்கள் துபாய் நாட்டிலிருந்து எனது சகோதரர் மற்றும் நண்பனும் உரிய திட்டத்தை அனுப்பி அவர்கள் நிதியை அனுமதிக்கிறார்கள்.
(1) பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி,
(2) சேர் ராசிக் பரீத் முஸ்லிம் கல்லூரி,
(3) புனித செபஸ்தியன் சிங்கள வித்தியாலயம்
(4) டப்ளியு ஜெயா வித்தியாகார
(5) புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி
(6) தெமட்டகொடை கைரியா,
(7) பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரி
(8) கொழும்பு கலைமகள்
(9) ஹம்சா கல்லூரி
(10) ஹேமாமாலினி பாலிகா
(11) மகாபோதி கல்லூரி
(12) புனித அந்தோனியார் தமிழ் கல்லூரி
பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பயிற்சிகளை வழங்கி ஒவ்வொறு குடும்பத்திற்கும் ஒர் பட்டதாரி மாணவனை உருவாக்க வேண்டும் என்ற தூய நோக்கில் கொழும்பு 10 மருதானை எனது சொந்த கட்டிடத்தில் கனனி இலவச வழிகாட்டல் நிலையமொன்றை உருவாக்கி வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றென். முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் ஏழை மாணவர்கள் கணினி அறிவினை பெற்றுள்ளார்கள்.