மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் Y.M.M.A கேட்போர் கூடத்தில் பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்களின் கேள்விகளுக்கு, கொழும்பு மாவட்ட புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர் சின்னம்) சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் நௌஸர் பௌஸி பதிலளிப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வர் எம்.டி.எம்.இக்பால், கித்சிறி ராஜபக்ஷ, ஷரப்தீன் அலி, ஷஃபான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதையும் படத்தில் காணலாம். இந்நிகழ்வில் வேட்பாளர் நௌஸர் பௌஸி, பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட பிரச்சினைகள் சிலவற்றிற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுத்ததோடு ஏனைய பிரச்சினைகளுக்கும் தேவையான நடவடிக்கைகள் தாம் விரைவில் மேற்கொள்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.
October 28, 2024
0 Comment
16 Views