சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் 26.10.2024 கைது செய்துள்ளனர்.
ஹட்டன் – பொகவந்தலாவ – டின்சின் பிரதேசத்தில் அனுமதி பத்திரங்களின்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் 46 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.