ஏ.எஸ்.எம்.ஜாவித்
வெல்லம்பிட்டி பொல்வத்தை சித்தி பாத்திமா உவைஸ் நிலையத்தில் இளம் பெண்கள் முஸ்லிம் அமைப்பும் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலும் இணைந்து பிரதேச மாணவர்களின் நலன்கருதி அஹதிய்யா பாடசாலையொன்றை 26.10.2024 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பட்லி ஹிஸாம் ஆதம் மற்றும் அவரது பாரியார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதியாக அஹதிய்யா பாடசாலை நடத்துவதற்கான இடத்தை வழங்கியுள்ள பரோபகாரி திருமதி நூருல் இம்தியாஸ் உவைஸ் கலந்து கொண்டார்.கெளரவ அதிதிகளாக பேராசிரியர் ரஸீன் பாபு, சட்டத்தரணி அஸ்ரப்ரூமி, வை.எம்.எம்.ஏ தலைவர் அம்ஹர் சரீப், கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொஹம்மட் ரசூல்தீன், காலித் பாறுக் ,பொரல்லை அஹதிய்யா பாடசாலை அதிபர் சிப்லி ஹாசிம், மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.உவைஸ் ஹாஜி உள்ளிட்ட முக்கியஸ்தகள் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பட்லி ஹிஸாம் ஆதம் சம்பிரதாயபூர்வமாக நாடாவை வெட்டி அஹதிய்யா பாடசாலையை திறந்து வைத்தார்.
இன்நிகழ்வில் பவாஸா தாஹா, பேராசிரியர் ரஸீன் பாபு, சட்டத்தரணி அஸ்ரப்ரூமி மற்றும் இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பட்லி ஹிஸாம் ஆதம் ஆகியோர்கள் உரையாற்றினர்.
இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. நன்றி உரையை பள்ளிவாசலின் பிரதித்தி தலைவர் எம்.என்.எம்.இர்பான் வழங்கினார்.