மட்டக்களப்பு
காத்தான்குடியில் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பில் பிரபல ஐஸ் வியாபாரிகள் இருவர் நேற்றிரவு (14)கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் பூநொச்சிமுனை பகுதியில் 5250 மில்லி கிராம் ஐஸ் ஐஸ்போதை பொருளை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து கொண்டிருந்த போது கொண்டிருந்த கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 5250 மில்லி கிராம் மற்றும் ஐஸ் போதை பொருள் மோட்டார் சைக்கிள் கையடக்க தொலைபேசி.என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இவரை மட்டக்களப்பு மாவட்ட உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதே வேளை 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றொருவர் காத்தான்குடி எம்.எம்.வி.பின் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச்சுற்றிளை மெற்கொண்டமை குறிப்பிடத்தக்கத.