எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை 25.10.2024 ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவு காரணமாக கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலின் பேரில், பிராந்திய தபால் அத்தியட்சகர்களின் மேற்பார்வையில், உரிய தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.