எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்குத் தேவையான உத்தியோகத்தர்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் 25.10.2024 உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
48 வாக்குச் சாவடிகளில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
26.10.2024 காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளுக்காக தமது அதிகாரிகளை ஈடுபடுத்த உள்ளதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.