சுற்றுலாப் பயணி அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக இந்த நாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைக்கு சில தனிப்பட்ட பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக சுற்றுலா மற்றும் கடல்சார் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீயை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அவரது தொலைபேசி இலக்கம் 0718 – 592651.
இதேவேளை, இந்த நாட்டில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு பிரிவால் இலங்கை பாதுகாப்பு புரிவிற்கு தகவல் கிடைத்தது.
ஒக்டோபர் 7ஆம் திகதி குறித்த திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய 23.10.2024 தெரிவித்தார்.
இந்த தகவலுடன், இலங்கையில் இஸ்ரேலியர்கள் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கை பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.