அடுத்த 48 மணி நேரத்தில் நில்வலா ஆற்றை சுற்றியுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மராட்டிய மற்றும் தேவனுவர செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வலா ஆற்றின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.