திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ்வரும் நியமனங்களுக்கு 21.10.2024 நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• தற்போது திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர உத்தியோகத்தரான எச்.சீ.டீ.எல்.சில்வா திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• தற்போது பிரதிச் செயலாளராகக் கடமையாற்றும் ஆர்.எம்.பீ.ரத்னாயக்க 2024.11.06 அன்று ஓய்வு பெற்ற பின்னரான வெற்றிடத்திற்கு தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திரு. டீ.ஏ.பீ.அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
• எச்.சீ.டீ.எல்.சில்வா திறைசேரி பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டமையால் வெற்றிடமான திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது அரச நிதித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.என்.ஹபுகல நியமிக்கப்பட்டுள்ளார்.
• தற்போது கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் பதில் கடமையிலுள்ள பணிப்பாளர் நாயகமாகக் கடiயாற்றிய இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான திரு.என்.எஸ்.எம்.பீ.ரஞ்சித் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
• தற்போது வெற்றிடமாகவுள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேடதர அதிகாரியான ஜே.எம்.எஸ்.டீ.ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.