முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலா நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
22.10.2024 இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த குண்டுத் தாக்குதல்கள் குறித்து புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.