பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் ஜனாதிபதியுடன் சந்திப்பு
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படும் வரியிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதெனவும், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.
மேற்படி கல்வி ஆய்வுகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தற்போதுள்ள சுற்று நிருபங்கள் ஊடாக போதிய ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும், தற்போதுள்ள வரி விதிப்புக்களிலிருந்து விடுப்பதற்கான சுற்று நிருபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிந்து 03 வாரங்களுக்கு தனக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை இரத்துச் செய்து பல்கலைக்கழக நிருவாகச் செயற்பாடுகளை கலினோனியா மற்றும் பீஜிங் பல்கலைக்கழக முறைமைகளுக்கமைய தயாரிப்பதற்கான இயலுமை தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பரண ஜயவர்தன, செயலாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் உட்பட சம்மேளத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, புத்தி ஜீவிகள் வெளியேற்றம் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 08 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பரிந்துரைகளை கையேற்றதுடன், உரிய பரிசீலனைக்கு உட்படுத்துவதாகவும் குறிப்பிட்டதோடு, சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. ஆர்.எச். எஸ் சமரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திஸாநாயக்க, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் மிமி தென்னகோன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திளர். ஹரித அலுத்கே, உப தலைவர் வைத்தியர். சந்திக எபிகடுவ மற்றும் சங்கத்தின் உதவி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இச்சந்த்திப்பில் கலந்து கொண்டனர்.