வடக்கு ரயில் பாதையில் மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதி திட்டமிட்டபடி மீண்டும் திறக்கப்படாது.
இந்த பகுதி ஜனவரி முதல் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
எப்பாவல மற்றும் தஹையாகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் பாதுகாப்பான பாதசாரிகள் கடவை இல்லாத காரணத்தால் குறித்த பகுதி மீண்டும் திறக்கப்படாது என ரயில் இன்ஜின் சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், கொழும்பில் இருந்து இயக்கப்படும் யாழ்தேவி ரயில், மஹவ வரை மட்டுமே பயணிக்கும். அநுராதபுரம் – மஹவ வரையிலான பகுதி நாளை திறக்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திறக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது