கொழும்பு – மட்டக்களப்பு ரயில் பாதையில் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடையில் யானைகள் கூட்டம் எரிபொருள் ரயிலுடன் மோதிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கூடி, இரண்டு வாரங்களில் சம்பவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
யானைக்கூட்டம் எரிபொருள் ரயிலுடன் மோதியதில் இரண்டு யானைகள் பலியாகியதுடன் மற்றுமொரு யானையும் கனரக கண்ணிவெடியால் காயமடைந்துள்ளது.
காட்டு யானைகள் கூட்டம் மோதிய இடத்தில், 20 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில் இயக்க வேண்டும் என்ற பலகைகள் பொருத்தப்பட்டு, அதிக வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.