ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.10.15
தெஹிவல ரவீந்தரவத்த மக்கள் எதிர் கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரதாணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
புதிய ஜனநாய முன்னணியின் தெஹிவல மேற்கின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் தெஹிவல கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினருமான டொக்டர் மரீனா ஆப்தீனின் ஏற்பாட்டில் தெஹிவல மேற்குப் பகுதி மக்கள் சந்திப்பு ஒன்று இன்று மாலை (15.10.2024) தெஹிவல ராமநாதன் அவன்யுவில் இடம்பெற்ற போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படிச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் திருமதி சுனீத்ரா ரனசிங்க உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் தெஹிவலப் பகுதி மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சாகல ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவித மோசடியும் செய்யாத சுத்தமானவர் என்றும் அவர் மக்களுக்கு நல்லது செய்யவே அவர் முயற்சித்தார் அதற்காகவே ஜனாதிபதிப் பொறுப்பiயும் ஏற்றுக் கொண்டார் என்றும் அவரின் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் இலக்கம் 19இல் தான் இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தனது நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதேயாகும் என்றும் குறிப்பாக இந்த ரவீந்திர வத்தை பகுதி மக்களில் அதிகமானவர்கள் ஏழ்மையில் வாழ்வதாகவும்இ அவர்கள் பல அடிப்படைத் தேவைகளுடன் வாழ்வதால் அதனை தான் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் உடன் தீர்த்து வைப்பதற்கு தான் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த டொக்டர் மரீனா ஆப்தீனன் சாகல ரத்நாயக்க மிகவும் நல்லவர் என்றும் அவர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஆர்வத்தில் இருப்பதாகவும்இ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நல்ல ஆலோசனை வழங்கி வந்தவர் என்றும் அவர் தனது சொந்தப் பணத்திலேயே தற’போது அரசியல் செலவுகளை செய்வதாகவும் அதிகமான மக்களுக்கு அவர் பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றார் என்றும் நிச்சயம் அவர் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஏழை மக்களின் பிரச்சினைகளை இனங் கண்டு தீர்த்து வைக்க உள்ளதாகவும் அவருக்கு எமது பூரண ஆதரவை வழங்கி வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.