சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டுள்ள மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் 16.10.2024 திறக்கப்படும் எனக் குறித்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு 14.10.2024, 15.10.2024 விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.