நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக மேலதிக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவதற்காக மேலும் இராணுவத்தினரை அனுப்புமாறு இராணுவத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 14.10.2024 பின்வரும் இடங்களில் நிவாரணப் பணிகளுக்காக படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மல்வானை – இராணுவக் குழு (படகுடன்)
கட்டுகொட – இராணுவக் குழு
வட்டரெக்க – இராணுவக் குழு (படகுடன்)
சீதாவக்க- இராணுவக் குழு
மீதொட்டமுல்ல – இரண்டு இராணுவ குழுக்கள் (நான்கு மீட்பு வாகனங்கள்)
கொலன்னாவ – இராணுவக் குழு (02 மீட்பு வாகனங்கள்)
நவகமுவ – இராணுவக் குழு (இரண்டு படகுகளுடன்)
பெலவத்த – இராணுவக் குழு (மீட்பு வாகனம்)
யட்டதொலவத்த – இராணுவக் குழு (மீட்பு வாகனம்)
இதற்கு மேலதிகமாக, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலமைகளின் போது ஈடுபடுத்துவதற்காக உரிய வளங்களுடன் 6500 இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.