இணையத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 129 சீன பிரஜைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasooriya) பணிப்புரைக்கமைய குறித்த விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் மற்றும் கண்டி காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குண்டசாலை பகுதியில் வைத்து நேற்று குறித்த 129 சீன பிரஜைகளும் கைதாகியிருந்தனர்.